‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்-காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்த மாரி படம் விமர்சக ரீதியாக தோல்வியைத் தழுவினாலும், கமேஷியல் அம்சங்கள் நிறைந்திருந்ததால், வசூலில் பட்டையைக் கிளப்பியது. இப்படம் மாஸ் என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 29ல் திரைக்கு வரவுள்ளது. இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் இப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தது. தமிழில் ராதிகா சரத்குமார் தனுஷின் இணை தயாரிப்பில் உருவான இப்படத்தை தெலுங்கில் தயாரிப்பாளர் வசிரெட்டி வாங்கி வெளியிடுகின்றார்.