மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சரிந்து கிடந்த தமன்னாவின் மார்கெட் தற்போது நிமிர துவங்கி விட்டது. அதிலும் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த தோழா படத்தின் வெற்றியும் தமன்னாவிற்கு கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது..
பிரபு தேவாவுடன் ஹிந்தி,தமிழ்,தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வரும் தமன்னா பாகுபலி 2 படத்திலும் நடித்து வருகின்றார். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் பிறர் படங்களில் குத்தாட்டாம் போட நேரமில்லை என தமன்னா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமன்னாவின் இந்த பதில் ஜனதா கேரேஜ் படக்குழுவிற்கானது என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.
அல்லுடு சீனு, ஸ்பீடுனோடு போன்ற படங்களில் குத்தாட்டம் போட்டுள்ள தமன்னாவை ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் குத்தாட்டம் போடவைக்க இயக்குனர் கொரடலா சிவா அணுகியுள்ளார். ஆனால் தமன்னா கால்சீட் பிரச்சனையைக் காரணம் காட்டி மறுத்து விட்டதாகக் கூறப்படுகின்றது