மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசுகளான ராம் சரண் தேஜ், வருண் தேஜ், சாய் தரண் தேஜ் என பலர் நாயகர்களாக வலம் வருகின்றனர். தற்போது மெகா குடும்பத்திலிருந்து நாயகி ஒருவர் வெள்ளிதிரைக்கு வந்துள்ளார். மெகா குடும்பத்தைச் சேர்ந்த நிஹாரிகா நாயகியாக நடிக்கும் 'ஒக மனசு' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றதாம். நாக சௌரியா நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ராமா ராஜு இயக்குகின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு ராம் சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மதுரா ஸ்ரீதர் டிவி9 நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றார்.