‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா புதுமுக இயக்குனர் சக்ரி இயக்கும் ராபின் ஹூட் படத்தில் நடிக்கின்றார். தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். பெங்கால் டைகர் படத்தில் ரவி தேஜாவுடன் நடித்த ராக்ஷி கண்ணா இப்படத்தில் மீண்டும் ரவி தேஜாவுடன் நடிக்கின்றார். இந்நிலையில் அதர்வா கேத்ரின் திரைஷா நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற கணிதன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கணிதன் படத்தை இயக்கிய டி.என்.சந்தோஷ் தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகின்றாராம். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் சந்தோஷ் ஈடுபட்டுள்ளாராம்.