முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
மலையாள சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என இருமுகம் கொண்டவர் நடிகர் விஜய்பாபு. நடிகராக இருந்த இவரை தயாரிப்பாளாராக்கிய பெருமை மோகன்லாலையே சேரும். மோகன்லாலுடன் இணைந்து நடித்த 'பெருச்சாழி' மற்றும் 'மிஸ்டர் பிராடு' ஆகிய படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்றாக அடையாளம் காட்டின. ஆனாலும் 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்' படத்தில் இவர் ஏற்றிருந்த பப்பன் என்கிற கணக்கு வாத்தியார் கேரக்டர் இவரை மிகச்சிறந்த நடிகராக அடையாளப்படுத்தியது. அதனால் ஒருபக்கம் படங்களை தயாரித்துக்கொண்டு இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் 'முதுகாவ்' என்கிற படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து வருகிறார் விஜய்பாபு. படத்தில் இவரது கேரக்டரின் பெயர் ராமச்சந்திரன் போனக்காடு.. ஆங்கிலத்தில் இதை சுருக்கி ராம்போ என வைத்துக்கொள்வாராம். அதுமட்டுமல்ல, ஹாலிவுட் படமான ராம்போ ஸ்டைலில் தனது கெட்டப்பையும் மாற்றியிருக்கிறாராம். பப்பன் வாத்தியாரைப்போல இந்த ராம்போ கேரக்டரும் இவருக்கு பெயர் வாங்கித்தரும் என்று சொல்கிறார்கள் படக்குழுவினர்.