மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அந்தள ராக்ஷசி எனும் அறிமுக படத்திலேயே ரசிகர்களின் ஆதரவை அள்ளிய நவீன் சந்த்ரா மற்றும் லாவண்யா திரிபதி மீண்டும் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை திகில் திரைப்படமான லக்ஷ்மிதேவிகி ஓ லெக்குன்டி. திரைக்கு தயாராகி வருகின்றது. தெலுங்கு திரை உலகின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெகதீஷ் இப்படத்தின் வாயிலாக இயக்குனராக மாறியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மயுஹா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சாய் பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார். டிசம்பரில் வெளிவந்த இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜனவரி 29ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான புரமோஷன் பணிகளையும் நடத்த இயக்குனர் முடிவு செய்துள்ளார்.