இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
போகிறபோக்கில் சில தகவல்களை சிலர் சொல்லிவிட்டு போவார்கள்.. ஆனால் அது மூடியிருக்கும் பல திரைகளை தன்னையறியாமல் விலக்கிவிட்டு போகும்.. சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் மலையாள இயக்குனர் பாசில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது 23 வருடங்களுக்கு முன் தான் இயக்கிய 'மணிச்சித்திரதாழ்' படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அந்தப்படத்தில் ஷோபனாவின் நடிப்பும், கம்பீர குரலும் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தில் ஷோபனா கங்காவாகவும் நாகவல்லியாகவும் (தமிழில் சந்திரமுகி') ஸ்பிலிட் பெர்சனாலிட்டியை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு தேசிய விருதும் மாநில அரசு விருதும் கூட கிடைத்தது.
ஷோபனாவின் இந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்டான பாக்யலட்சுமி என்றுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதில் பாதிதான் உண்மை. ஆம், ஷோபனாவின் கங்கா கதாபாத்திரத்திற்கு பாக்யலட்சுமியும் நாகவல்லி கதாபாத்திரத்திற்கு துர்கா என்பவரும் டப்பிங் பேசியிருந்தனர்.. இந்த துர்கா இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனை திருமணம் செய்துகொண்டவர். எண்பதுகளில் ராதா, அம்பிகாவுக்கு தமிழில் டப்பிங் குரல் கொடுத்தவரும் இவர் தான்.
ஆனால் 'மணிச்சித்திரதாழ்' படத்தில் துர்கா டப்பிங் பேசிய விபரம் வெளியே தெரியாமலேயே இருந்ததால், அவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கிடைக்கவேண்டிய வாய்ப்புகளும் அங்கீகாரமும் தட்டிப்போனது என்னவோ உண்மை. தற்போது பாசிலின் மனம் திறந்த பேட்டியால் உண்மை வெளிச்சத்திற்கு வர, பலரும் துர்காவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருவதால் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்து வருகிறார் துர்கா.