மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அஜித்தை வைத்து 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்', 'வேதாளம்' ஆகிய படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. இவர் 'எனக்கு 20 உனக்கு 18', 'கேடி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். த்ரிஷா, தமன்னாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ஜோதி கிருஷ்ணா இயக்கிய படங்களின் தோல்வி காரணமாக படம் இயக்குவதை மறந்து, தன் அப்பாவின் தயாரிப்பில் பங்கு எடுத்த வந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார். 'ஆக்சிஜன்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவரான கோபிசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரிஷி கன்னா நடிக்கவிருக்கிறார். இதுவரை காதல் படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா இந்தப்படத்தை ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இயக்கவிருக்கிறாரம்.
'ஆக்சிஜன்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது. ஜோதி கிருஷ்ணாவின் மனைவி ஐஸ்வர்யாவின் பெயரில்தான் அஜித் நடிக்கும் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.