‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா, எழுத்தாளர் சங்கல்ப் ரெட்டி எழுதிய ப்ளூ பிஷ் எனும் புத்தகத்தை தழுவி எடுக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிவிபி நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாஷி(Ghazi) என பெயரிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் சங்கல்ப் ரெட்டியே இப்படத்தை இயக்கவுள்ளார். ராணா கப்பற்படை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது பிரகாஷ் ராஜ் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் படக்குழு பிரகாஷ் ராஜ் வேடத்திற்கு வேறு ஒரு நடிகரை தேடி வருவதாக தெரிகிறது. வரலாற்று திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ராணாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.