மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கோலிவுட் கைவிட்ட அனேகன் பட நாயகி அமைராவிற்கு டோலிவுட் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. தெலுங்கு திரை உலகின் வெற்றிப் பட இயக்குனர் தற்போது இயக்கி வரும் லோபர் படத்திற்கு பின்னர் இயக்கவிருக்கும் படத்தில் அமைரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி இயக்கும் படத்தில் மஞ்சு விஷ்ணுவிற்கு ஜோடியாக நடிக்க அமைரா சம்மதம் தெரிவித்துள்ளாராம். இப்படத்தில் அமைரா கிராமத்து நாயகியாக பாவாடை தாவணியில் காட்சி தரவுள்ளாராம். இப்படத்தில் நடிகர் ராஜ் தருண் மற்றொரு நாயகனாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக அவிகா கோர் அல்லது ஹீப்பா படேல் நடிக்கலாம் என கூறப்படுகின்றது. இப்படத்தை ஏகே எண்டர்டையின்மெண்ட் பேனர் நிறுவனத்தின் சார்பில் அணில் சங்கரா தயாரிக்கின்றார். நடிகர் ராஜேந்திர பிரசாத் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஜனவரி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.