‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவிக்கு முன்பே அறிமுகமானவர் பால கிருஷ்ணா. அவரைப்போலவே அரசியலிலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ள அவர் தெலுங்கு தேசம் பார்ட்டியில் இடம்பெற்றுள்ளார். அதோடு, எப்போதுமே மாஸ் கதைகளில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிரஞ்சீவி போன்ற தனது சம காலத்து ஹீரோக்கள் பலர் பீல்டு அவுட்டாகி வெளியேறி விட்டபோதும் இப்போதுவரை தனது மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி வைத்துள்ளார் பாலகிருஷ்ணா. தற்போது 55 வயதை கடந்து விட்ட அவர், மகேஷ்பாபு போன்ற இளவட்ட ஹீரோக்கள் நடிப்பது போன்ற கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார்.
மேலும், தனது மாஸ் இமேஜ்க்கு செட்டாகக்கூடிய கதைகள் வேறு மொழிகளில் வெளியானால் அந்த கதைகளின் ரைட்ஸை வாங்கி ரீமேக் செய்வதையும் வழக்கமாகக்கொண்டு வருகிறார் பாலகிருஷ்ணா. அந்த வகையில் ஸ்ரீ ராமராஜ்ஜியம், லெஜன்ட், லயன் படங்களைத் தொடர்ந்து தற்போது டிக்டெடர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், சமீபத்தில் அஜீத் நடித்து வெளியாகியுள்ள வேதாளம் படத்தை பார்த்த அவருக்கு படம் ரொம்ப பிடித்து விட்டதாம். அதோடு அந்த கதையில் தான் நடித்தால் பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கிறாராம். அதனால் வேதாளம் படத்தின் தெலுங்கு உரிமையை யார் வாங்கினாலும் அதில் தான் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளாராம் பால கிருஷ்ணா. ஏற்கனவே ஜூனியர் என்டிஆரும், வேதாளம் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.
இப்படி முன்னணி நடிகர்களே, வேதாளம் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளதால் இதுவரை எந்த தமிழ்ப்படமும் இல்லாத அளவுக்கு அஜீத்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரைட்ஸ் பெரிய தொகைக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.