மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பலே பலே மகாதேவோ படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் நடிகர் நானி தனது அடுத்த படங்களில் பிசியாகி விட்டார். பலே பலே மகாதேவோ படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ஜெய் பாலைய்யா படத்தின் படப்பிடிப்புகளை நானி துவங்கி விட்டார். 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஹனு ரகாவபுடி இயக்குகின்றார். இப்படத்தில் டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக நானி நடிக்கின்றாராம். இதனால் இப்படத்திற்கு ஜெய் பாலைய்யா என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இறுதிக் கட்டத்தை எட்டிய இப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை டிசம்பர் மாத இறுதியிலோ அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதத்திலோ வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஆந்திர மாநிலத்திற்கான திரையரங்கு உரிமையை அபிஷேக் பிக்ச்சர்ஸ் பட நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளதாக டோலிவுட்ட வட்டாரத்தில் கூறப்படுகின்றது.