ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாகுபலி இரண்டாம் பாகத்திற்கான பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், பாகுபலி இரண்டாம் பாகத்தில் இன்னொரு ஹீரோயினும் இணைந்துள்ளார்.
என்ன? ஏற்கனவே, பிரபாஸுக்கு அனுஷ்கா, தமன்னா இருக்கும்போது இன்னுமொரு ஹீரோயினா என எண்ண வேண்டாம். இந்த ஹீரோயின் வில்லன் ராணா டகுபதிக்கு.
சரி, யார் அந்த ஹீரோயின், பிரம்மன் படத்தில சசிகுமார் ஜோடியா நடிச்சாங்களே, லாவண்யா த்ரிபாதி, அவங்கதான்.
இந்த படத்துல பல்லால தேவனின் மனைவியா நடிக்கிறாங்களாம். முதல் பாகத்துல பல்லாலதேவனின் மகன காட்டினாங்க, மனைவி பற்றிய எந்த ஒரு காட்சியும் இல்லை. ஆனால், இரண்டாம் பாகத்தில் பல்லால தேவனின் இளைய காலம் காட்டப்படுவதால் அவருக்கு நாயகி தேவைப்படுகிறது. பாகுபலி இரண்டாம் பாகத்தில் கிடைத்த வாய்ப்பில் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளார் லாவண்யா. இவர் சமீபத்தில், நானியோடு இணைந்து நடித்து வெளியான பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிதான் இதற்கு காரணமா இருக்குமோ!!!