‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கஞ்சே படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் வருண் தேஜ் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்துள்ள மா அம்மா மகாலக்ஷ்மி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் கோபிசந்த் இயக்கும் படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ராகுல் ப்ரீத்தி சிங் நடித்தாலும் எந்த படமும் அவர் பெயர் சொல்லும் வகையில் வெற்றிப் படமாக அமையவில்லை. கிக் 2 படத்தில் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடித்த ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு அப்படத்தின் எதிர்பாராத தோல்வி பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாம். ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு ஆறுதல் வெற்றியாக அமையும் என எதிர்பார்த்த ப்ரூஸ் லீ படமும் சுமார் ராகமாகவே அமைந்தது. தற்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் நன்னுக்கு பிரேமதோ , நடிகர் அல்லு அர்ஜுனுடன் சரைனொடு போன்ற படங்களில் ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். தொடர் தோல்விகளைக் கண்டு வரும் ராகுல் ப்ரீத்தி சிங்கின் தெலுங்கு திரை உலக மார்கெட் இனி வெளிவரும் படங்களின் வெற்றியில் தான் உள்ளது.