ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளிவந்த லெஜன்ட் படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை சோனல் சௌகன் அப்படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் டிக்டேட்டர் படத்திலும் நடித்து வருகின்றார். நடிகை அஞ்சலி முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சோனல் சௌகன் இரண்டாவது நாயகியாக நடிக்கின்றார். நடிகர் கல்யாண் ராமுடன் சோனல் சௌகன் ஜோடி சேர்ந்து நடித்த ஷேர் திரைப்படம் அண்மையில் வெளிவந்தது.
இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சோனலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதானல் அடுத்து தான் பாலகிருஷ்ணாவுடன் நடித்து வரும் டிக்டேட்டர் படத்தை சோனல் சௌகன் அதிகமாக நம்பியுள்ளாராம். நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தில் சோனல் சௌகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இவ்விரு படங்களின் வெற்றியே சோனலுக்கு புதிய பட வாய்ப்புக்களை பெற்று தரும் என்பது குறிப்பிடத்தக்கது.