ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்த சர்வானந்த் டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். சர்வானந்த் கடைசியாக நடித்த மல்லி மல்லி இதி ராணி ரோஜு எனும் தெலுங்கு திரைப்படம் சர்வானந்திற்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தை தொடர்ந்து எக்ஸ்ப்ரஸ் ராஜா எனும் படத்தில் சரவானந்த் நாயகனாக நடித்தார். இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்த நடிகை சுரபி இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் காந்தி இயக்குகின்றார். நடிகர் பிரமாஜி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஐதராபாத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. டிசம்பருக்குள் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து 2016 ஜனவரி மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சர்வானந்த் தனது அடுத்த படத்திற்கான கதையை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றாராம்.