மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாகுபலி,ருத்ரமாதேவி படங்களைத் தொடர்ந்து டோலிவுட்டில் வெளிவர காத்திருக்கும் வரலாற்று திரைப்படம் கஞ்சே. நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் நடித்துள்ள இப்படம் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ஒரு போர் வீரனின் காதல் கதையாகும். வருண் தேஜ் இப்படத்தில் வீரமான போர்வீரனாக நடித்துள்ளார். இயக்குனர் கிர்ஷின் இயக்கத்தில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் பாடல்களும் வெளிவந்து ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்சமயம் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் துவக்கி விட்டனர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற களம் போன்று அரங்குகளை அமைத்து இப்படத்தின் புரமோஷன் பணிகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் திரைக்கு வரும் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.