மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகின்றார். நடிகை தமன்னா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இப்படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் சைகோ திரில்லர் படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடத்தில் நடித்து வருகின்றார். பேய் மற்றும் மனோத்தத்துவ மருத்துவர் என இருவேறு வேடங்களில் நாகார்ஜுனா இப்படத்தில் நடித்துள்ளார்.
சொக்கடே சின்னி நயனா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு வேடங்களில் நடிக்கும் நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக இப்படத்தில் நான்கு நாயகிகள் நடித்துள்ளனராம். நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், லாவண்யா திரிபதி, அனுஷயா, ஹம்சா நந்தினி என நான்கு நாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படம் நவம்பரில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.