மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் மஞ்சு விஷ்ணு நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த டைனமைட் படத்தை தொடர்ந்து அடடா படப் புகழ் இயக்குனர் கார்த்திக் ரெட்டி இயக்கும் படத்தில் மஞ்சு விஷ்ணு நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் நயாகியாக நடிகை சோனாரிக்கா நடிக்கின்றார். காதல் மற்றும் அதிரடி திரைப்படமான இப்படத்தை டி.குமார் மற்றும் கேஷவராவ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளன. இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் கூறுகையில், அதரடி படமாக இப்படத்தை உருவாக்கினாலும் இப்படத்தில் காதலுக்கு முக்கிய பங்கு உண்டு என கூறியுள்ளார். தற்போது நாயகன் நாயகி சம்மந்தப்பட்ட காட்சிகள் முதல் கட்ட படப்பிடிப்பில் எடுத்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் அடுத்து காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என கார்த்திக் நம்பிக்கை தெரிவித்தார்.