மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சில மாதங்களுக்கு முன்பு கமல் தனது உத்தமவில்லன் படத்தின் ஆடியோவை, ட்ரெய்லரை ஆன்லைனில் அப்லோட் செய்து அதை மும்பையில் இருக்கும் ஸ்ருதி பெற்றுக்கொள்ளுமாறு செய்து ஆச்சர்யப்படுத்தினார் அல்லவா..? அதேபோன்ற, ஆனால் டெக்னாலஜியின் வேறொரு புதிய பாணியை கையாண்டு தங்களது பட துவக்க விழாவை நடத்தியிருக்கிறார்கள் மலையாள இரட்டை இயக்குனர்களான சித்திக்-லால் ஜோடி. ஐபோன் நிறுவனம் தற்போது ஐபோன் 6S என்கிற மாடலை கேரளாவில் அறிமுகப்படுத்தும் விதமாக கொச்சியில் அறிமுக நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது..
அதில் உள்ள உள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது நண்பர் லால் இயக்கும் 'கிங் லயர்' படத்திற்காக தான் எழுதிய ஸ்கிரிப்ட்டை ஐபோன் 6S மூலமாக லாலிடம் ஒப்படைத்தார் இயக்குனர் சித்திக். நீண்டநாட்கள் கழித்து மலையாள இயக்குனர்கள் சித்திக்-லால் இணைந்து உருவாக்கும் இந்தப்படத்தில் திலீப் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டின் நடிக்க, முக்கிய வேடத்தில் ஆஷா சரத் நடிக்க இருக்கிறார். சித்திக்-லால் கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு லெவல் இப்போதே அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.