ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
டுவிட்டரில் தனது இருப்பை சர்ச்சைகளாலும் சண்டைகளாலும் அடிக்கடி நிரூபிக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, டுவிட்டரில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார். டோலிவுட்டின் பிரபல நடிகரும் அரசியல் பிரபலமுமான பவன் கல்யாணின் ரசிகர்கள் பலத்தினை நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகர்களுடன் ஒப்பிட்டு இரு தரப்பினரிடையே சண்டையைத் தூண்டியுள்ளார். டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராம் கோபால் வர்மா பவன் கல்யாணின் டுவிட்டர் ரசிகர்கள் 6 லட்சமாகவும், மகேஷ் பாபுவின் டுவிட்டர் ரசிகர்கள் 15 லட்சமாகவும் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், இதனை பார்க்கும் போது பவன் கல்யாணின் ரசிகர்கள் பலர் கல்வி அறிவு அற்றவர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பவன் கல்யாண் சில மாதங்களுக்கு முன்னரே டுவிட்டரில் இணைந்ததையும் மகேஷ் பாபு நீண்ட காலமாக டுவிட்டரைப் பயன்படுத்தி வருவதையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள ராம் கோபால் வர்மா பவன் கல்யாண் ரசிகர்களுக்கு கல்வி அறிவை வளர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மகேஷ் பாபுவை பவன் கல்யாணை விட அதிக ரசிகர் பலம் கொண்ட நடிகர் என ராம் கோபால் கூறியுள்ளதாக பவன் கல்யாண் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.