ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? |

 
நடிகர் மம்முட்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் மம்முட்டி கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். தன் மனதுக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் நடிக்கவும் புதிய திறமையான இயக்குனர்களை அறிமுகப்படுத்தவும் தான் இந்த நிறுவனத்தை அவர் துவங்கினார். அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட ஏழு படங்களை தயாரித்துள்ளார் மம்முட்டி. இந்த நிலையில் முதன்முறையாக குறும்படம் ஒன்றையும் மம்முட்டி கம்பெனி தயாரித்திருக்கிறது. ஆரோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தின் மூலம் ரசிகர்கள் சினிமா அனுபவம் பெற வேண்டும் என்கிற நோக்கில் தயாரிக்கப்படுவதால் மம்முட்டி கம்பெனிக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இது வெளியிடப்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்த குறும்படம் தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ள இருக்கிறது. நேற்று கொச்சியில் நடைபெற்ற இந்த குறும்படத்தின் திரையிடலின் போது மம்முட்டி, மஞ்சு வாரியர் மற்றும் இயக்குனர் ரஞ்சித் மூவரும் கலந்து கொண்டனர்.