முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஆக., 14ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் நடிகையும் தயாரிப்பாளருமான சான்ட்ரா தாமஸ் என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இப்படி ஒரு பெண் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது இதுதான் முதல் முறை. ஆனால் அவரது வேட்பு மனுவை தேர்தல் நிர்வாக குழு நிராகரித்தது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சான்ட்ரா தாமஸ். அவர் தனியாக இரண்டு படங்களை தயாரித்திருந்தாலும் ஏற்கனவே நடிகர் விஜய்பாபு என்பவருடன் இணைந்து ஏழு படங்களை இணை தயாரிப்பாளராக தயாரித்துள்ளார். ஆனால் அதை கணக்கில் கொள்ளாமல் அவர் வெறும் இரண்டு படங்கள் மட்டும்தான் தயாரித்திருக்கிறார். ஆனால் தேர்தலில் போட்டியிட மூன்று படங்களை தயாரித்திருக்க வேண்டும் என்பதை காரணம் காட்டி அவரது மனு நிகராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருடன் இணைந்து படங்களை தயாரித்த தயாரிப்பாளர் விஜய்பாபு தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து கூறும்போது, “சான்ட்ரா தாமஸ் என்னுடைய நிறுவனத்தில் இருந்து அவருக்கு சேர வேண்டியதை எல்லாம் பெற்றுக் கொண்டு 2016லேயே விலகி விட்டார். அதனால் என்னுடன் இணைந்து தயாரித்த படங்களை அவர் கணக்கில் சேர்க்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் திரையுலகை சேர்ந்த சிலர், அவர் எத்தனை படங்களை தயாரித்துள்ளார் என்பது தான் கேள்வியே தவிர, யாருடன் இணைந்து தயாரித்தார், எந்த வருட காலகட்டத்தில் தயாரித்தார், இப்போது அவருடன் சேர்ந்து இருக்கிறாரா, விலகி விட்டாரா என்பதெல்லாம் ஒரு கேள்வியே அல்ல.. அவர் கணக்குப்படி மொத்தம் 9 படங்களில் அவர் தயாரிப்பாளர் தான். அந்த வாதம் தான் நீதிமன்றத்திலும் செல்லும் என்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இடையில் இருக்கும் நிலையில் சான்ட்ரா தாமஸ் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து பரபரப்பு நீடித்து வருகிறது.