என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ்', சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே இவர் படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு போலீஸில் கைதாகி ஜாமினில் விடுதலை ஆனவர். சமீபத்தில் தான் இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது பிடிபட்ட பெண் ஒருவர் நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி என்கிற இருவருக்கும் தாங்கள் ரெகுலராக போதை பொருள் சப்ளை செய்து வருவதாக கூறியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் மலையாள நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் ஷைன் டாம் சாக்கோவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தபோது போதைப்பொருள் பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஷைன் டாம் சாக்கோவை இந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்க தேடிய போலீசார் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கி இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்று சோதனை செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட ஷைன் டாம் சாக்கோ தான் தங்கி இருந்த மூன்றாவது மாடியில் அறையின் பின்பக்கத்தில் இருந்து குதித்து தப்பி கால் டாக்ஸி ஒன்றை புக் செய்து ஹோட்டலின் வெளியே சென்று காரில் ஏறிக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.
இது குறித்த விபரம் அங்கிருந்து சிசிடிவி காட்சிகள் மூலமாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல அந்த ஹோட்டலுக்கு அறை எடுத்து தங்குவதற்காக வந்தபோது கூட அவர் ஒரு பைக்கில் தான் வந்தார் என்றும் அந்த பைக்கையும் ஹோட்டலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, தான் மட்டும் உள்ளே வந்து தன் பெயரிலேயே அறை எடுத்து தங்கினார் என்றும் தெரியவந்துள்ளது. கடைசியாக அவரது மொபைல் போன் டவர் காட்டிய சிக்னலின் படி அவர் தமிழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்று கேரள போலீஸாரிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளதாம்.