பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ஷைன் டான் சாக்கோவுடன் 'சூத்ரவாக்யம்' படத்தில் நடித்த சக நடிகையான வின்சி அலோசியஸ் என்பவர், படப்பிடிப்பிலேயே ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே சாக்கோவின் தந்தை விபத்தில் உயிரிழந்தார். அடுத்தடுத்த சம்பவங்களால் மனமுடைந்திருந்தார் சாக்கோ. இந்த நிலையில், ஷைன் டாம் சாக்கோ உடன் வின்சி அலோசியஸ் நடித்த 'சூத்ரவாக்யம்' படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. யூஜின் ஜோஸ் சிரம்மள் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜலை 11ல் ரிலீசாகிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சி ஷைன் டாம் சாக்கோ, யூஜின் ஜோஸ், வின்சி அலோசியஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவர் முன்னிலையில் வின்சியிடம் மன்னிப்பு கோரினார் ஷைன் டாம் சாக்கோ. நேர்காணல்களின் போதும், படப்பிடிப்புத்தளத்திலும் 'பொழுதுபோக்கு' என்ற பெயரில் தான் அடிக்கடி இப்படி 'அதீதமாக' நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய வின்சி, தங்களுக்கிடையே வேறு எந்தப் பிரச்னைகளும் இல்லை என்று தெரிவித்தார்.
ஷைன் டாம் சாக்கோவின் வெளிப்படையான மன்னிப்பும் அங்குள்ள திரைக்கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.