பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! |
மலையாள திரை உலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 35 படங்களுக்கு மேல் இணைந்து இயக்குனர்-நடிகர் கூட்டணியாக பணியாற்றியவர்கள் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும். மோகன்லாலின் மகன் பிரணவ் இயக்குனராக ஆசைப்பட்டு அதற்காக வெளிநாடு சென்று படித்துவிட்டு வந்து இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினார். ஆனால் காலத்தின் கட்டாயத்தில் அவரும் தந்தையைப் போல நடிகராக மாறி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
அதேபோல பிரியதர்ஷினின் மகள் கல்யாணி ஒரு ஆர்ட் டைரக்டராக மாற விரும்பி வெளிநாட்டில் அதற்கான படிப்பு எல்லாம் படித்துவிட்டு பிரபல கலை இயக்குனர் சாபு ஷிரிலிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பிறகு அவரும் நடிகையாக மாறி தற்போது இளம் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் பிரணவுடன் இணைந்து 'ஹிருதயம்' மற்றும் 'வருஷங்களுக்கு சேஷம்' என இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்தார் கல்யாணி. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் என்றும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் கூட சில செய்திகள் வெளியாகின.
ஆனால் பிரபல மலையாள தயாரிப்பாளர் ஆலப்பி அஷ்ரப் என்பவர் இது பற்றி சமீபத்திய வீடியோ ஒன்றில் கூறும்போது, “மோகன்லாலின் மகன் காதலிப்பது உண்மைதான்.. ஆனால் கல்யாணியை அல்ல. இருவரும் உடன் பிறந்தவர்களை போலத்தான் பழகி வருகிறார்கள். இது குறித்து நான் நடிகை லிசியிடமே கேட்டபோது, அவர்களுக்குள் அப்படி ஒரு காதல் இருந்தால் நல்ல விஷயம்தான். எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் அவர்களிடம் அப்படி எதுவும் இல்லை. குறிப்பாக சிறுவயதில் இருந்தே பழகியதால் இருவரும் அண்ணன் தங்கை போலத்தான் பழகுகிறார்கள். ஆனால் பிரணவ் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று என்னிடம் கூறினார்” என்ற ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மோகன்லால் இயக்கத்தில் வெளியான 'பரோஸ்' திரைப்படம் சென்னையில் சிறப்புக் காட்சியாக சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்ட போது அதில் பிரணவ் மோகன்லால் கலந்து கொண்டார். அவருடன் அவரது அம்மா மற்றும் சகோதரியுடன் ஒரு வெளிநாட்டு இளம்பெண்ணும் இருந்தது அப்போது சிலரது புருவத்தை உயர வைத்தது. தற்போது ஆலப்பி அஷ்ரப் சொல்வது கூட அந்த பெண் தான் என்றும் இப்போது உறுதியாகி உள்ளது, அநேகமாக இந்த வருடத்திலேயே பிரணவ் மோகன்லாலின் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.