நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'மார்கோ'. 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ஓடிடியில் வெளியாகி அதிலும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெற்றி பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. இந்த நிலையில் கேரள சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கொலை செய்பவர்களை ஹீரோக்களாக சித்தரிப்பதா என்று 'மார்கோ' படத்தை தாக்கி பேசி உள்ளார்.
கோழிக்கோட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது...
"சமீபகாலமாக வெளியாகும் பல சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. ரவுடிகளை படங்களில் மகான்கள் போல காட்டுகின்றனர். படங்களில் அதிக கொலைகள் செய்பவர் ஹீரோவாக அங்கீகரிக்கப்படுகிறார். அதைப்பார்த்து மாணவர்களும் ரவுடிகளாக மாறுகின்றனர். சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய (மார்கோ) ஒரு படத்தை பார்த்து சில பள்ளி மாணவர்கள் ரவுடி கோஷ்டியில் சேர்ந்ததாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது" என்றார்.




