வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி |
சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் இயக்குனர் சாச்சி டைரக்ஷனில் அய்யப்பனும் கோஷியும் என்கிற படம் வெளியானது. பிரித்விராஜ் பிஜூமேனன் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற ஒரு இளம் ராணுவ அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தமாக இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜி ஆர் இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை சினிமாவுக்காக மாற்றும் வேலைகளில் ஈடுபட்டிருந்த போதுதான் இயக்குனர் சாச்சி எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவினர்.
ஆனாலும் அவரது கனவு படமான இதை எடுத்தே தீருவது என முடிவு செய்த பிரித்விராஜ், சாச்சியின் உதவியாளரும் தன்னுடன் லூசிபர் படத்தில் பணியாற்றியவருமான ஜெயன் நம்பியாரின் டைரக்சனில் இந்த படத்தில் நடிக்க தொடங்கினார். இடையில் படப்பிடிப்பின் போது பிரித்விராஜுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள், லூசிபர் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை உருவாக்கும் பணியில் என பிஸியாகிவிட்டார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் சமீபத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இது நிறைவு செய்துள்ளார் பிரித்விராஜ். இரண்டரை வருடத்திற்கு மேலான கடுமையான உழைப்பு வெற்றிகரமாக நினைவுக்கு வந்துள்ளது என்று கூறியவர் பிரித்விராஜ் இந்த படத்தை டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.