அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் தற்போது 303 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடித்த 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது. இதே நிறுவனம் தயாரித்து, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான பான் இந்தியா படமான 'கேம் சேஞ்ஜர்' படம் தோல்வியைத் தழுவியது. மற்றொரு படமான பாலகிருஷ்ணா நடித்த 'டாகு மகாராஜ்' படம் குறைந்த லாபத்தையே தந்தது.
'சங்கராந்திகி வஸ்துனம்' படம் பெரும் லாபத்தைக் கொடுத்ததாக சமீபத்தில் நடந்த நன்றி விழாவில் அதன் வினியோகஸ்தர்களே மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்கள். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகாமல், தெலுங்கில் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.