சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

மலையாள திரையுலகில் இந்த வருடம் வெளியான பல படங்கள் 50 கோடி முதல் 200 கோடி என்கிற மிகப்பெரிய வசூல் இலக்கை கூட தொட்டு ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு சில தான் இந்த சாதனையை தொட்டன. ஆனால் சிறிய பட்ஜெட்டில் உருவான பல படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் மழையில் நனைந்தன. ஆனால் அப்படி வசூலை அள்ளிய பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரசிகர்களின் உணர்வுகளை மென்மையாக வருடி வெற்றி பெற்ற படங்களாக தான் இருந்தன. அதேசமயம் இந்த வருட இறுதியில் கடந்த வாரம் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படம் ஐந்தே நாளில் உலக அளவில் 50 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் இந்த படம் அதிகபட்ச வன்முறை காட்சிகளுடன் வெளியாகி உள்ளது. பெண்கள் மற்றும் குடும்பமாக வந்து பார்க்கும் கூட்டம் குறைவு என்றாலும் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளும் படத்தின் விறுவிறுப்பும் இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது. மேலும் தற்போது மோகன்லால் இயக்கி நடித்துள்ள பரோஸ் திரைப்படம் வெளியாகியும் கூட மார்கோ படத்திற்கு குறைவில்லாத கூட்டம் வந்து கொண்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ஆச்சரியமாக சொல்லப்படுகிறது.