பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா, தொடர்ந்து கதாநாயகனாகவே அதிரடியான படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தொலைக்காட்சியில் அன்ஸ்டாப்பிள் என்கிற ஒரு ரியாலிட்டி ஷோவையும் தொடர்ந்து வெற்றிகரமாக தொகுத்து வழங்கி நடத்தி வருகிறார். இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களைப் பற்றியும் தங்களது படங்களை பற்றியும் புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டு புரமோஷன் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் விரைவில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் பாலகிருஷ்ணாவின் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் பேசிய பாலகிருஷ்ணா, அங்கே இருந்த திரையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் புகைப்படத்தை காட்டி இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அல்லு அர்ஜுன், “இவர் என்னுடைய பேவரைட் நடிகர். பாலிவுட்டில் உள்ள மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் இந்த தலைமுறையில் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு நடிகராக இருக்கிறார். நான் அவரை ரொம்பவே ரசிக்கிறேன்” என்று கூறினார். உடனே பாலகிருஷ்ணா சற்றும் யோசிக்காமல் நீங்கள் இருவரும் இணைந்து ஒரு மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என கேட்க அதற்கு அல்லு அர்ஜுன் நிச்சயமாக அது சூப்பராக தான் இருக்கும் சார் என்றார்.
உடனே பாலகிருஷ்ணா, “அப்படியானால் ரன்பீர் கபூரும், அல்லு அர்ஜுனும் ஒரு மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்கப் போகிறார்கள்” என்று அங்கிருந்த ஆடியன்ஸை பார்த்து கூறியதுடன், “உங்களுக்கு ஆறு மாதம் நான் டைம் கொடுக்கிறேன். யாரும் உங்களுக்காக ஸ்கிரிப்ட் எழுதவில்லை என்றால் நானே உங்களுக்காக கதை எழுதுகிறேன்” என்றும் கூறினார். பாலகிருஷ்ணாவின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன் குறிப்பாக அல்லு அர்ஜுன் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது .