ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, ராம்சரண் இருவரும் தற்போது தங்களின் அடுத்தடுத்த படங்களின் வேளைகளில் பிஸியாக இருக்கின்றனர். ராஜமவுலி இயக்கத்தில் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதேபோல ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இவர்கள் இருவரும் தங்களது மனைவி, குழந்தைகளுடன் குடும்பமாக வெளிநாட்டு பயணங்கள் சென்று வந்துகொண்டு தான் இருந்தனர். இந்த நிலையில் ராம்சரண் மனைவி உபாசனா மற்றும் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் ஆகியோர் தங்களது இன்னும் சில தோழிகளுடன் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் கிளம்பி சென்றுள்ளனர். கணவர்கள் உள்ளூரில் வேலையில் பிஸியாக இருக்க, இவர்கள் மாலத்தீவில் தோழிகளுடன் ஜாலியாக பொழுதுபோக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.