ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் |
மோகன்லால் நடிப்பில் தற்போது ரிலீஸுக்கு தோதாக பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவரது நடிப்பில், இயக்கத்தில் உருவாகி உள்ள பரோஸ், ஜோஷி இயக்கத்தில் நடித்துள்ள ரம்பான், லூசியர் இரண்டாம் பாகமான எம்புரான் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள விருஷபா உள்ளிட்ட படங்கள் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கின்றன. இந்த நிலையில் மோகன்லால் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் தனது 360வது படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் மோகன்லால் உடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார் நடிகை ஷோபனா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாலக்காடு, தேனி, தொடுபுழா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. படம் துவங்கி படப்பிடிப்பு முடியும் வரை இதன் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு துடரும் (தொடரும்) என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மோகன்லால் ஒரு பழைய அம்பாசிடர் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.