விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு |
மலையாள சினிமாவை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள நடிகர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. குறிப்பாக நடிகர் சங்கச் செயலாளர் சித்திக் மீது பல புகார்கள் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முன்பே அறிந்திருந்த நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தார் என்று அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்தார்கள்.
இதனால் தற்போது மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தற்காலிக நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஜூனில் பொதுக்குழு கூடி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் துணைத்தலைவர் ஜெயன சேர்தலா, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரும் பழைய நிர்வாகிகள் மீண்டும் பதவிக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மோகன்லால் மலையாள நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தலைவராகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், தான் தலைவர் பதவியை மீண்டும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் சங்க பிரச்சினைகளால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாவதால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.