பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாள திரை உலகில் மும்மூர்த்திகள் என்று சொல்லும் அளவிற்கு மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு இணையாக பல வருடங்கள் வலம் வந்தவர் நடிகர் சுரேஷ் கோபி. அதன் பிறகு அரசியல் பக்கம் பார்வையை திருப்பிய அவர் தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைந்து ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தார். பின்னர் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி தற்போது மத்திய அமைச்சராகவும் மாறியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வெண்பஞ்சு நிறத்தில் தாடியுடன், முறுக்கு மீசையுடன் பொதுவெளியில் வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அரசியல்வாதியாக மாறிவிட்டதால் அவர் இந்த கெட்டப்பில் வருகிறார் என்று தான் அனைவரும் நினைத்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகில் தனது பணிகளை தொடர மறுபிரவேசம் செய்துள்ளார் சுரேஷ்கோபி. அடுத்ததாக இவர் நடிக்க இருக்கும் ஒத்தக்கொம்பன் படத்திற்காக தனது தாடியை க்ளீன் ஷேவ் செய்துவிட்டு மீண்டும் இளமையான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, “மாற்றம் ஒன்றே மாறாதது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒத்தக்கொம்பன் படம் 2020லேயே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா மற்றும் அவரது அரசியல் பணிகளால் அந்த படம் தள்ளிப் போய் இப்போது மீண்டும் துவங்க உள்ளது. பிஜூமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை மகேஷ் பாறையில் என்பவர் இயக்குகிறார்.