'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! | அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகின் நடிகர் பிரித்விராஜ் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளராகவும் மாறியவர் பின்னர் இயக்குனராகவும் மாறி மோகன்லாலை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது படங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் மோகன்லால் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கி வருகிறார். இவரது அண்ணன் இந்திரஜித்தும் மலையாள திரை உலகில் குறிப்பிடத்தக்க நடிகர் தான்.
இவர்களின் தந்தை மறைந்த நடிகர் சுகுமாரன். தாயார் மல்லிகா சுகுமாரன்.. அவரும் ஒரு நடிகை தான். கடந்த சில வருடங்களாக குறிப்பாக கணவரின் மறைவுக்கு பிறகு குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக நடிப்பை விட்டு ஒதுங்கிய அவர் சமீப காலமாக மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவருக்கு 70 வயது ஆகி உள்ளது. அவரது பிறந்த நாளை பிரித்விராஜ், இந்திரஜித் சகோதரர்கள் தங்களது மனைவி குழந்தைகள் சகிதமாக குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், “இந்த குடும்பத்தின் இளம் உறுப்பினரான உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எப்போதுமே என்றும் 16 ஆக இருக்க வேண்டும் அம்மா” என்றும் வாழ்த்தியுள்ளார்.