தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களிடம் பிரபலம் இல்லாத சின்ன சின்ன நடிகர்களுடன், ஓரளவு பிரபலமான நடிகர் சவுபின் ஷாஹிர் மற்றும் ஸ்ரீநாத் பாஷி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும்போது அங்கிருந்த குணா குகைக்குள் ஸ்ரீநாத் பாஷி தவறி விழுந்து விட அவரை காப்பாற்ற உடன் வந்த நண்பர்கள் நடத்தும் போராட்டம் தான் இடைவேளைக்கு பிறகு மீதி படம் முழுவதும் இடம் பெற்றிருந்தது. சொல்லப்போனால் இதை ஒரு சர்வைவல் திரில்லர் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் தற்போது அப்படி குழிக்குள் விழுந்த நடிகரான ஸ்ரீநாத் பாஷி மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி1 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள வாகமன் பகுதியில் இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. மலையடிவார கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தன்னுடைய சொந்த ஊருக்கு வரும்போது சில எதிர்பாராத சம்பவங்களால் சிக்கலுக்கு ஆளாகிறான். அப்படிப்பட்ட சூழலில் அந்த இடத்திலிருந்து அவன் எப்படி தப்பிக்க முயற்சிக்கிறான் என்பதை மையப்படுத்திய ஒரு சர்வைவல் திரில்லராக இந்த படம் உருவாகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஷான் எம் என்பவர் இயக்குகிறார்.