விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியையும் தாண்டி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரசிகர்களின் வரவேற்புடன் வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தற்போது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. இதில் சமீபத்தில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொர்க்கமும் நரகமும் என்கிற ஒரு டாஸ்க், போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்டது. இதில் நரகத்திற்கு செல்லும் போட்டியாளர்களுக்கு என ஜெயில் செட்டப் ஒன்றும் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் டாஸ்க் என்கிற பெயரில் அதில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் குறிப்பாக அதற்குள் அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மிகப்பெரிய அவதிகளை சந்தித்ததையும் பார்க்க முடிந்தது.
அதே சமயம் கர்நாடக மாநில பெண்கள் ஆணையம் இதற்கு எதிர்ப்பு குரல் எழுப்பியதுடன் கும்பலக்காடு காவல் நிலையத்திற்கு இது குறித்து புகார் ஒன்றையும் அனுப்பியது. இதனை தொடர்ந்து நிஜ போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே நுழைந்து அந்த ஜெயில் டாஸ்க்கில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களிடம் என்ன நடந்தது, அவர்களுக்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டன என்பது பற்றி எல்லாம் விரிவாக விசாரித்துள்ளனர். ஆனாலும் பெண் போட்டியாளர்கள் தங்களுக்கு இந்த டாஸ்க்கால் எந்தவிதமான அசவுகரியங்களும் ஏற்படவில்லை என்று போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. காவல்துறை வட்டாரத்தில் இருந்து இப்படி ஒரு தகவல் வெளியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து இது குறித்து ஏதாவது விளக்கம் தெரிவித்து அறிக்கை வரும் என எதிர்பார்க்கலாம்.