பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவர் சுசின் ஷியாம், கடந்த ஏழு வருடங்களாக படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் முதன்முறையாக கிஸ்மத் என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு மம்முட்டியின் தி கிரேட் பாதர், மோகன்லாலின் வில்லன் ஆகிய படங்களுக்கு பின்னணி இசை அமைத்து பிரபலமான இவர் தொடர்ந்து பஹத் பாசில் நடித்த வரதன், கும்பலாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், மாலிக் மற்றும் சமீபத்தில் வெளியான ஆவேசம் வரை அவரது பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அது மட்டுமல்ல கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்ணூர் ஸ்குவாட் மற்றும் இந்த வருடம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்திருந்தார். சமீபத்தில் தான் ஆவேசம் மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகியவற்றின் இசையை நடைபெற இருக்கும் கிராமி விருது விழாக்களின் தேர்வுக்காக அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவர் பேசும்போது, இன்னும் சில மாதங்களுக்கு நான் ஓய்வெடுக்க போகிறேன். எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. இது நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி கொள்ளவும் என்னையே புதுப்பித்துக் கொள்ளவும் என்று கூறியுள்ளார்.