ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். சில வருடங்களுக்கு முன்பு ஜனசேனா என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் இறங்கினார். 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சியினர் அனைவருமே தோல்வியடைந்தனர். இந்த வருடம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அவரது கட்சி பா.ஜ., தெலுங்கு தேசம் ஆகிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற்றது. பவன் கல்யாண் கட்சியைச் சேர்ந்த போட்டியிட்ட அனைவருமே வெற்றி பெற்றனர். பவன் கல்யாண் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அவர் படங்களில் நடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் இறங்கினார். அவர் நடித்து வந்த 'ஓஜி, ஹரிஹர வீரமல்லு, உஸ்தாத் பகத் சிங்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது 'ஓஜி' படத்தின் படப்பிடிப்பில் பவன் கல்யாண் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அப்படத்தைத் தயாரித்து வரும் பிரபல தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பவன் கல்யாண் நடித்து வரும் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாக உள்ளது.