நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சென்னை : தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், ஜாய் கிரிசில்டா என்பவருடன் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. முதல் மனைவியை விட்டு பிரிந்து விட்டதாகவும், ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஏமாற்றி விட்டார்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : என்னோட கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் எந்த தொடர்பிலும் இல்லை. எனக்கும், என்னுடைய குழந்தைக்காகவும் இந்தப் புகாரை கொடுத்துள்ளேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார். இந்தக் குழந்தைக்கான ஒரு பதில் வேண்டும். அவர் தான் இந்தக் குழந்தையின் அப்பா. அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
நாங்கள் திருமணம் செய்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அபார்ட்மென்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இது அனைவருக்கும் தெரியும். முதல் திருமணம் நடந்தது தெரியாது. முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக என்னிடம் கூறினார். அதை நம்பி தான் திருமணம் செய்து கொண்டேன். ஒன்றரை மாதமாக தொடர்பில் இல்லாமல் இருக்கிறார். சென்னையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
என்னை அடித்தார்
இப்போது, நான் 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். அப்படியே என்னை விட்டு விட்டு சென்று விட்டார். எனக்கும், என் குழந்தைக்கும் ஒரு பதில் வேண்டும். ரங்கராஜை நேரில் சந்திக்க முயற்சித்தேன். ஆனால், அவரை என்னிடம் பேச விடாமல் தடுத்துள்ளனர். எனக்கு ஒரு தீர்வு கிடைத்தவுடன் நான் மீடியாவை சந்தித்து விளக்கம் அளிப்பேன். அவருடன் நான் வாழ வேண்டும். அவரை கைது செய்வார்களா? என்பதை போலீசார் தான் முடிவு செய்வார்கள்.
ரங்கராஜ் பிசினஸில் இருந்ததாலும், அவரது அம்மா, அப்பா கேட்டுக் கொண்டதாலும், திருமண புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தேன். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவரை பார்த்தேன். அவர் பேச தயாராக இல்லை. பேச முயன்ற போது, அனைவர் முன்னிலையிலும் என்னை அடித்தார். கருவையும் கலைக்கச் சொன்னார்.
இவ்வாறு அவர் கூறினார்.