சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா |
நடிகர் விஷால் தனது பிறந்த நாளை முன்னிட்டு அளித்த பேட்டி : என் திருமணம் குறித்த நல்ல செய்தியை இன்று வெளியாகிறது(வெளியானது). எங்கு சென்றாலும் பலர் என் திருமணம் குறித்து கேட்கிறார்கள். அவர்களுக்கு வேட்டி சேலை எடுத்து கொடுக்க வேண்டும். சினிமாவில் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளாக இருப்பது உலக சாதனை. ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா எடுக்கப்படும். இப்போது நடிகர் சங்க கட்டட பணிகள் நடப்பதால் விரைவில் பாராட்டு விழா குறித்து பரிசீலிக்கப்படும். 9 ஆண்டுகால உழைப்பில் உருவாகி வரும் நடிகர் சங்க புது கட்டடம், 2 மாதத்தில் திறக்கப்படும். நடிகர் சங்க நிர்வாகி அதை திறக்க கடுமையாக உழைத்து வருகிறோம். நான் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவனாக, விஜய் ரசிகராக அவரின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து சொல்கிறேன். சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லும் அவர் முயற்சி வெற்றி பெறணும்.
இவ்வாறு அவர் கூறினார்.