பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தமிழ் சினிமாவில் 'லவ் டுடே, ட்ராகன்' என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', சுருக்கமாக 'எல்ஐகே', மற்றும் 'டியூட்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வந்தார். இதில் 'எல்ஐகே' படத்தை செப்டம்பர் 18ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். 'டியூட்' படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்கள்.
ஆனால், 'எல்ஐகே' படத்தின் வெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைத்து அக்டோபர் 17ம் தேதி வெளியிடுகிறோம் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்கள். அது போல 'டியூட்' படத்தையும் தீபாவளி வெளியீடு என மீண்டும் உறுதி செய்தார்கள்.
இந்நிலையில் தீபாவளிக்கு இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒன்றுதான் வரும் என படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் எந்தப் படம் வரும் என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஆனால், அதற்குள் எத்தனை பஞ்சாயத்துக்கள் நடக்கும் என்பதுதான் பெரிய கேள்வி.




