என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் |
தீபாவளி வெளியீடாக இந்த வருடம் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சில படங்களின் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அவற்றோடு மேலும் சில படங்கள் சேரவும் வாய்ப்புள்ளது. இதற்கடுத்து பெரும் போட்டி அடுத்த வருட பொங்கலுக்கு வர உள்ளது.
விஜய் நடித்து வரும் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது என ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள். இப்போது அதே தேதியில் பிரபாஸ் நடித்துள்ள பான் இந்தியா படமான 'தி ராஜா சாப்' படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இதற்கு முன்பு அப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். தற்போது சங்கராந்தி வெளியீடு என்று சொல்லிவிட்டார்கள்.
இதனால், 'ஜனநாயகன்' படத்திற்கும், 'தி ராஜா சாப்' படத்திற்கும் இடையே கடும் போட்டி உருவாகும். ரஜினி நடித்து வெளிவந்த 'கூலி' படம் தெலுங்கில் அமோக வெற்றி பெற்றது. அதை விடவும் 'ஜனநாயகன்' படத்தை தெலுங்கில் ஓட வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், 'தி ராஜா சாப்' வெளியாவதால் தெலுங்கில் 'ஜனநாயகன்' படத்திற்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதுபோல மற்ற மொழிகளிலும் பிரபாஸ் படத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்தான் பான் இந்தியா ஸ்டார் ஆக உள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் வேண்டுமானால் விஜய்க்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கலாம். மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் கிடைப்பது சிரமமாகவே இருக்கும்.