'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
கிரிஷ் இயக்கத்தில், அனுஷ்கா, விக்ரம் பிரபு மற்றும் பலர் நடிக்கும் படம் 'காட்டி'. தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
இப்போதெல்லாம் ஒரு படம் வெளிவந்தால் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தேடித் தேடிப் போய் பேட்டிகளைத் தருகிறார்கள். வாராவாரம் பல படங்கள் வெளியாவதால் போட்டி நிறையவே இருக்கிறது. பெரிய படங்களுக்குக் கூட புரமோஷன்கள் தேவைப்படுகிறது. ஆனால், 'காட்டி' படத்திற்காக அனுஷ்கா இதுவரை எந்த ஒரு பேட்டியையும் தரவில்லை. படத்திற்காக அவர் வெளிவரத் தயங்குகிறாரா அல்லது புறக்கணிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கில் கூட அனுஷ்கா ஒரு பேட்டியையும் தராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 'பாகுபலி எபிக்' படத்திற்காக அவர் பேட்டி ஒன்றைத் தந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பழைய படத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை அவர் புதிய படமான 'காட்டி' படத்திற்கும் தரலாமே என படத்தை வாங்கியவர்கள் புலம்புகிறார்களாம்.