ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மயுகம் என்கிற படம் வெளியானது. ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கிய இந்த படம் 17ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக அதேசமயம் மாந்திரீக பின்னணி கொண்ட ஹாரர் ஜானரில் உருவாகி இருந்தது. அதுமட்டுமல்ல மம்முட்டி இந்த படத்தில் 80 வயதான வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் லெட்டர் பாக்ஸ்ட் என்கிற தளம் வருடந்தோறும் உலகெங்கிலும் வெளியாகும் படங்களை வெவ்வேறு பிரிவுகளாக பிரித்து அவற்றின் ஒவ்வொரு பிரிவுகளிலும் சிறந்த 25 படங்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2024ல் உலகெங்கிலும் இருந்து வெளியான சிறந்த 25 ஹாரர் படங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் இந்தியாவிலிருந்து மம்முட்டியின் பிரம்மயுகம் மற்றும் பாலிவுட்டில் வெளியான ஸ்ட்ரீ 2 என இரண்டு படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. இதில் மம்முட்டியின் பிரம்மயுகம் இரண்டாவது இடத்தையும், ஸ்ட்ரீ 2 திரைப்படம் 23வது இடத்தையும் பிடித்துள்ளன.