இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளா அரசு வெளியிட்ட நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள திரை உலகில் கடந்த பல வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதிகார மையமாக சேர்ந்து பிறரை வளர விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் பல பிரபல நடிகர்கள், இயக்குனர்களுடன் தாங்கள் சில வருடங்களுக்கு முன்பு எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க தொடங்கினர். அந்த வகையில் பிரபல குணச்சித்திர நடிகர்களான முகேஷ், சித்திக் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகர் முகேஷ் முன்ஜாமின் பெற்றிருந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
ஆனால் நடிகர் சித்திக்கின் ஜாமின் மனு கேரள உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இதனை அறிந்த சித்திக் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்போது தலைமறைவாகி உள்ளார். போலீசார் அவர்மீது லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னொரு பக்கம் உச்சநீதிமன்ற மூலமாக அவருக்கு ஜாமின் பெறுவதற்கான வேலைகளும் துவங்கியுள்ளன. அதன் முடிவை தொடர்ந்து சித்திக் வெளியே வருவார் என சொல்லப்படுகிறது. அதற்குள் போலீசார் அவரை கைது செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.