சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
மலையாள திரையுலகை பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுற்றி சுழன்றடித்து வருகின்றன. நடிகைகள் பலர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்பங்கள் குறித்து சோசியல் மீடியாக்களில் குற்றச்சாட்டுகளாகவும் காவல்துறையில் புகார்களாகவும் தெரிவித்து வருகின்றனர். இதில் பிரபல நடிகர்கள், சில பிரபல இயக்குனர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மன்சூர் ரஷீத் என்பவர் படப்பிடிப்பின் போது ஒரு துணை நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த உதவி இயக்குனர் ஐதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் தானாகவே சரணனடைந்ததை தொடர்ந்து கங்கா ரெட்டி ஜெயிலில் 14 நாட்கள் ரிமாண்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் நடிகர் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கிய ப்ரோ டாடி என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து படப்பிடிப்பில் உள்ள ஒரு சிலருக்கு தெரிந்தாலும் கூட அடுத்ததாக தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கி வரும் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படத்திலும் பணியாற்றி வந்தார்.
ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகர் பிரிதிவிராஜ் அது குறித்து கூறும்போது, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஆண் பெண் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மன்சூர் ரஷீத் பற்றிய இந்த தகவல் அவருக்கு தெரிய வந்ததும் படப்பிடிப்பிலிருந்து அவராகவே கிளம்பி சென்று போலீசில் சரணடைய பிரித்விராஜ் வலியுறுத்தியதை தொடர்ந்து அவர் தானாகவே முன்வந்து சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.