உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம் | பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் |

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'ஸ்வீட் காரம் காபி' தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார் சாந்தி. தேசிய விருது பெற்ற கிரிஷாந்தின் 'தி க்ரோனிகல்ஸ் ஆப் தி 4.5 கேங்'கில் சாந்தி அடுத்து நடிக்கவுள்ளார். தற்போது முரளி கோபியின் திரைக்கதையில், ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் மலையாளம்-தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தி திரைக்கதை எழுத்தாளராகி இருக்கிறார். நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான திரைக்கதையை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து அடுத்ததாக படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சாந்தி.