டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளித்தனர். அதில் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளித்தார். அது மட்டுமல்ல கோழிக்கோட்டை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் ஆண் நடிகர் ஒருவரும் நடிகர் ரஞ்சித் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் வாய்ப்பு கேட்டு சென்ற தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை ஒரு பிரபல நடிகைக்கு அனுப்பியதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் பெற்றுள்ளார் இயக்குனர் ரஞ்சித். இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் அந்த ஆண் நடிகர் கூடிய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ளனர்,
இது குறித்து அவர்கள் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகர் 2012ல் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற இயக்குனர் ரஞ்சித்தின் படப்பிடிப்பிற்கு அவரை சந்திக்க வந்த போது ஒரு டிஷ்யூ பேப்பரில் தன்னுடைய மொபைல் நம்பரை எழுதிக் கொடுத்த ரஞ்சித் பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள தாஜ் ஹோட்டலுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு கூறியதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டல் துவங்கப்பட்டதே 2015 க்கு பிறகு தான் அப்படி இருக்கையில் எப்படி அந்த ஹோட்டலுக்கு தன்னை வரச்சொன்னதாக அந்த நபர் குறிப்பிட்டது உண்மையாக இருக்க முடியும் என்று கூறி இந்த வழக்கு வேண்டுமென்றே இயக்குனர் ரஞ்சித்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.




